ஃபிஜியில் உள்ள சொகுசு ஹோட்டலில் மது அருந்திய 7 பேருக்கு திடீர் வயிற்றுப் பிரச்சனை..!!
ஃபிஜியில் உள்ள வார்விக் ஃபிஜி என்ற சொகுசு விடுதியில் தங்கியிருந்த 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மது அருந்திய பிறகு திடீர் வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) இடம்பெற்றது.
வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக ஹோட்டலுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வேறு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் அவர்கள் குணமடைவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஹோட்டலின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விருந்தினர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் லாவோசில் மெத்தனால் கலந்த மது பானத்தை அருந்தி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நடந்தது.
Follow us on : click here