உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் காலமானார்!!

உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் காலமானார்!!

60 ஆண்டுகளாக தபேலா இசைக் கலைஞராக தனது இசையால் அனைவரையும் கவர்ந்த உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் இயற்கை எய்தினார்.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவருக்கு 73 வயது .அவர் நுரையீரல் கோளாற்றால் காலமானதாக தெரிவித்தனர்.

அவர் கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக The Hindu நாளேடு வெளியிட்டது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் 3 Grammy விருதுகளை வென்று பெருமைப் பெற்றுள்ளார். மொத்தம் 4 Grammy விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு (2023) பத்ம விபூஷன் விருதைப் பெற்றார்.

இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருதை 1988 ஆம் ஆண்டில் பெற்றார். அவருக்கு பத்ம பூஷன் விருது 2002 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.