சிங்கப்பூரில் BTO வீடுகளின் கட்டுமான பணிகள் தொடக்கம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிளமென்டி, தோ பாயோ மற்றும் புக்கிட் மேராவில் விற்பனைக்கு வராத தேவைக்கேற்ப கட்டப்படும் (BTO) வீடுகளின் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
அந்தத் திட்டத்தின் படி கிளமென்டி அவென்யூ 6 மற்றும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் 1.6 ஹெக்டேர் நிலப்பரப்பில் 753 வீடுகள் கட்டப்படுகின்றன.
இதேபோல், பிரேடல் ரைஸ் மற்றும் தோ பாயோ ரைஸ் சந்திப்பில் 1.7 ஹெக்டேர் நிலப்பரப்பில் 741 வீடுகளை கட்டும் பணியானது தொடங்கியுள்ளது.
அலெக்ஸாண்ட்ரா சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் 1,462 அடிப்படை கட்டுமான பணிகளை தொடங்க மாநகராட்சி கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 1,462 வீடுகளில், 964 வீடுகள் 2023 இல் அறிவிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா பீக்ஸ் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எஞ்சியுள்ள 498 வீடுகள் அலெக்ஸாண்ட்ரா பீக்ஸ் அருகே இன்னும் அறிவிக்கப்படாத திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் என்று அது கூறியது.
கிளமென்டியில் கட்டப்படும் 753 வீடுகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறை வீடுகள் இருக்கும்.
இந்த வீடுகளின் கட்டுமான பணிகள் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது.
இந்த வீடுகள் அனைத்தும் 2029 முதல் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோ பாயோவில் கட்டப்படும் 741 வீடுகள் 2029 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு 40 மாடிகள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிகிறது.
புக்கிட் மேராவில் உள்ள 498 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் பிரின்ஸ் சார்லஸ் கிரசென்ட் மற்றும் அலெக்சாண்டிரா சாலை சந்திப்பில் அமைய உள்ளது.
Follow us on : click here