ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!!

டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் சிங்கப்பூர் தனது முதல் வெற்றியை பதித்த நிலையில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றி யை பதித்துள்ளது.

Timor Leste அணிக்கு எதிராக சிங்கப்பூர் அணி போட்டியிட்டது.

3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது.

இப்போட்டி ஹனோயிலுள்ள Hang Day மைதானத்தில் நடைபெற்றது.


இப்போட்டியில் சிங்கப்பூர் தனது முதல் கோலை ஆட்டத்தின் 76 வது நிமிடத்தில் அடித்தது.

அதன் பிறகு இரண்டு கோல்களை 83,90 வது நிமிடங்களில் சிங்கப்பூர் அடித்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து A குழுவில் சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் மலேசியா உள்ளது.

4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தாய்லாந்து உள்ளது.

அடுத்ததாக, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூர் தாய்லாந்துக்கு எதிராக போட்டியிடும்.

அதன் பின் சிங்கப்பூர் டிசம்பர் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மலேசியாவுடன் போட்டியிட கோலாலம்பூருக்கு செல்வர் என தெரிவிக்கப்பட்டது.