சிங்கப்பூர் வங்கிகள் குறைந்த வட்டியில் மின்சார வாகனங்களுக்கு கடன் தர முன் வருகின்றன.
அதனை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வங்கிகள் கடன்தர முன் வருகிறது.
நான்கு மடங்கு மின்சார கார் கடனுக்கான தேவை உயர்ந்திருப்பதாக OCBC வங்கி கூறியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கார் கடன்களில் 10 விழுக்காடு மின்சார கார்களுக்கான கடன் என குறிப்பிட்டது.
அதனை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுட்டால் அது கடந்த 2022-ஆம் ஆண்டு நான்கு மடங்கானது என்று, OCBC வங்கி கூறியது.
தற்போது சிங்கப்பூரில் அதிகமான மின்சார கார்கள் தேர்வு செய்வதற்கு இருக்கின்றன.
ஆனால், அனைவரும் மின்சார கார்களுக்கு மாற தயாராக இல்லை.
இதற்கு காரணமாக போதுமான மின்னூட்ட நிலையங்கள் இல்லாதது.
அதுமட்டுமில்லாமல் , இதற்காக காத்திருக்கும் நேரமும் அதிகம்.
அதோடு சாதாரண கார்களை விட மின்சார கார்களின் விலை அதிகம்.