அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட டிக் டாக் தளத்தின் தடை நிறுத்த கோரிக்கை..!!!

அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட டிக் டாக் தளத்தின் தடை நிறுத்த கோரிக்கை..!!!

டிக் டாக் தளத்தின் அவசர கோரிக்கையை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

டிக் டாக் செயலிக்கு உரிமையான ByteDance,அடுத்த மாதம் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் செயலியைத் தடை செய்யும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி கேட்டது.

கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.

டிக்டாக், பைட் டான்ஸ் ஆகியவை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கால அவகாசம் கேட்டுள்ளன.

நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என்றால், டிக்டாக் செயலியின் பயன்பாடு நிறுத்தப்படும் என்று நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிக் டாக் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.