சிங்கப்பூர் செல்ல RMI கட்டாயமாக தேவைப்படுமா? எப்படி வாங்குவது? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்!!
சிங்கப்பூர் செல்ல RMI கட்டாயமாக தேவைப்படுமா, எப்படி வாங்குவது என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்!!
RMI என்றால் என்ன?
நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு உங்களுடைய சான்றிதழ்கள் அனைத்தையும் சரிபார்க்கப்பட்டு சிங்கப்பூரால் வழங்கப்படும் சான்றிதழ் RMI Or Avanzz. ஒரு சில பேர் பொய்யான சான்றிதழ்களை கொடுத்ததினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்டது தான் RMI or AVANZZ.
உங்களிடம் RMI அல்லது AVANZZ சான்றிதழ் இருந்தால் உங்களுக்கு அப்ளை செய்யும் கம்பெனிக்கு அப்ரூவல் விரைவாக கிடைக்கும். அதனால் ஒரு சில கம்பெனிகள் RMI வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதனால் RMI வைத்திருப்பவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
ஒரு சில ஏஜென்ட்கள் இதனை லாப நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார்கள். RMI நேரடியாக எடுத்தால் 8000 வரை செலவாகும். ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் 20000 க்கும் மேல் வாங்குகிறார்கள்.
RMI எடுத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நீங்கள் எந்த வேலைக்காக செல்ல உள்ளீர்களோ அதற்கான அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே நீங்கள் சிங்கப்பூர் செல்ல முடியும். நேரடியாக RMI எடுக்கும்போது டாக்குமென்ட்களை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்களுக்கு சரியான பதில் கிடைக்காது.
நீங்கள் நேரடியாக செல்லாமல் ஏஜென்ட்கள் மூலம் RMI வாங்க நினைத்தால் உங்களின் அனைத்து டாக்குமென்ட்களையும் சமர்ப்பித்து வாங்கி தருவார்கள். அதேபோல் நீங்கள் நன்றாக விசாரித்த பிறகு குறைந்த செலவிலும், சீக்கிரமாகவும் RMI யார் எடுத்து தருவார்களோ அவர்களிடம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
RMI தேவைப்படாத நிறைய வேலை வாய்ப்புகள் சிங்கப்பூரில் இருக்கின்றன. Diploma படித்தவர்களுக்கு RMI இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு கீழ் படித்தவர்களுக்கு RMI சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதுபோன்ற தகவலை தெரிந்து கொள்ள SGTAMILAN இணையதளத்தில் இணைந்திருங்கள்.
Follow us on : click here