சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்கு தீ வைத்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!!

சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்கு தீ வைத்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீ வைத்ததாக கருதப்படும் 33 வயதான நபர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

நேற்று (டிசம்பர் 12) அதிகாலை 2.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிகரெட் தருமாறு காவல்துறை துணை அதிகாரிகளிடம் அந்த நபர் கேட்டபோது,அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

போலீசார் வருவதற்குள் அந்த நபர் அறையில் இருந்த திரைச்சீலையை கழற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அந்த நபர் தனது கோரிக்கையை ஏற்காவிட்டால் தீயை பரவச் செய்வேன் என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிலைய போலீசார் தீயை அணைத்தனர்.

தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் மீது அந்த நபர் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

பொது இடங்களில் இம்மாதிரியான அபாயகரமான செயல்களை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.