pulao upin தீவில் காணாமல் போன முழு நேர தேசிய சேவையாளரை தேடும் பணியில் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படையும் ஈடுபட்டுள்ளன.
Tampines தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அந்த நபர் காணாமல் போன நேரத்தில் பணியில் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.
சம்பவ இடத்தை அடைந்தபோது ஆடவரை அங்கு காணவில்லை தேடல் பணி அப்போதே தொடங்கப்பட்டது.
தேடல் பணியில் நீருக்கு அடியில் செயல்படும் சாதனங்களும் பயன்படுத்தப்படுகிறது.