Latest Sports News Online

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தது.

இதை அடுத்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிய நிலையில் ஒருவர் மட்டும் இறங்காமல் இருக்கையிலேயே இருந்துள்ளார்.

அதை தொடர்ந்து விமானப் பணியாளர்கள் அவரை எழுப்புவதற்கு முயன்றனர்.

இருப்பினும் எவ்வித அசைவும் இன்றி இருக்கையிலே இருந்துள்ளார்.

இதனால் விமானக் குழுவினர் உடனடியாக விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அவரை விமான நிலையத்தில் இருந்து கீழே இறக்கி பரிசோதனை செய்தனர்.

அதில் அந்த பயணி நடு வானிலேயே ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது.

விசாரணையில் உயிரிழந்த பயணியின் பெயர் முனியசாமி என்றும் வயது 36 என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர் வேலைக்காக சிங்கப்பூர் சென்றதாகவும் முனியசாமி 1 ஆண்டிற்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் நடு வானிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து முனியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.