ஹவ்காங் கொலை வழக்கில் 42 வயது சீன ஆடவர் மீது குற்றச்சாட்டு...!!!
சிங்கப்பூர்: ஹவ்காங்கில் 34 வயது பெண்ணை கொலை செய்ததாக 42 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த டூ சாய்ஸிங் என்பவர் திருவாட்டி டாவ் தி ஹோங்கைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் டிசம்பர் 10 ஆம் தேதி தெரு 21, புளோக் 210 இல் இடம்பெற்றுள்ளது.
திருவாட்டி டாவ் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த விவரம் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தாக்கியவர் மற்றும் 26 வயதுடைய ஆடவர் என இருவர் காயமடைந்துள்ளனர்.
இதனால் தாக்குதலுக்குள்ளான பெண் உட்பட மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்தப் பெண் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதனால் டூ சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக டூ ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.
விசாரணை அடுத்த வாரம் வியாழக்கிழமை (டிசம்பர் 19) தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
Follow us on : click here