பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!!
பிரிட்டனில் சாலையில் சிகரெட் துண்டை வீசியவருக்கு சுமார் 800 பவுண்டுகள் ($1,400) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே 23 அன்று, கார்ல் ஸ்மித் என்பவர் புரோம்லி நகரின் சாலையில் ஒரு சிகரெட் துண்டை வீசியதற்காக குற்றம் சாட்டப்பட்டது.
கார்ல் ஸ்மித் தன் மீதான குற்றத்தை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புரோம்லி நகரில் குப்பை கொட்டியதற்காக தண்டனை விதிக்கப்பட்ட 12வது வழக்கு இதுவாகும்.
குப்பை வீசிய குற்றத்திற்காக குற்றவாளிகள் மொத்தம் 6,000 பவுண்டுகளுக்கு மேல் அபராதம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய,புரோம்லி நகர மன்றத்தின் நிர்வாக கவுன்சிலர் குப்பை கொட்டுவது பெரும் பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார்.
தெருக்களை சுத்தம் செய்வதற்கான செலவு பல மில்லியன்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Follow us on : click here