முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!!
சிங்கப்பூர் : ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்று(டிசம்பர் 11) நடைபெற்றது.
நேற்று நடந்த போட்டியில் சிங்கப்பூரும், கம்போடியாவும் மோதின.
2-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிப் பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரின் Faris Ramli,Shawl Anuar ஆகிய இருவரும் கோல்களை அடித்தனர்.
ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் கம்போடியாவின் Sieng Chanthea கோல் அடித்தார்.
ஒரு கோல் அடித்த கம்போடியாவை இரண்டாவது கோல் அடிக்க விடாமல் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது.
ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டியில் சிங்கப்பூர் விளையாடிய முதல் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here