Singapore news

சிங்கப்பூரில் அனுமதித்த காலத்திற்கு மேல் தங்கியவர்கள் கைது!

சிங்கப்பூரில் அனுமதித்த நாட்களை விட தாண்டி தங்கிய குற்றங்களுக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அவர்களுடைய வேலை அனுமதிச் சீட்டும் (work permit),வருகை அனுமதி அட்டைகளும் காலாவதி ஆகி விட்டது.

அவர்கள் தச்சுப் பணியில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை ஏப்ரல் 13-ஆம் தேதி வியாழக்கிழமை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு குறிப்பிட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.23 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கிம் சுவான் சாலையில் ஏப்ரல் 4-ஆம் தேதி அதிகாலை சாலையில் கைது செய்யப்பட்டனர்.

அனுமதித்த காலத்தைவிட கூடுதல் நாட்கள் தங்குவதை தான் கடுமையான குற்றமாக கருதுவதாக ஐசிஏ சொன்னது.

“ சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐசிஏ கடமைக் கொண்டுள்ளது. குடிநுழைவு குற்ற நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உள்நாட்டு அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்´´ என ஆணையம் கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.அதோடு, குறைந்தது மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.