சிங்கப்பூரை வசிப்பதற்கு ஏற்ற மேலும் உகந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது.
அதிபர் உரை முடிந்த பிறகு, அதற்கான திட்டங்களைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
போக்குவரத்து வசதிகள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்தது.
அந்த அம்சங்கள் “முன்னேறும் சிங்கப்பூர்´´ கலந்துரையாடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்ததாக அமைச்சகம் கூறியது.
குறிப்பாக மூத்தோர்களுக்கும், எளிதில் நடமாட முடியாதவர்களுக்கும் புதிய வசதி அமைக்கப்படும். மேம்பாலங்களில் அவர்களுக்காக மின்தூக்கிகள் அமைக்கப்படும்.
இதுவரை 77 மேம்பாலங்களில் மின்தூக்கிகள் வசதி இருக்கிறது.
இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக மேலும் 30 பாலங்களில் மின்தூக்கிகள் கட்டப்படுகிறது.
அதன் பிறகு இன்னும் கூடுதலாக 110 பாலங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது.
மேலும் பல அம்சங்கள் நடப்போருக்கு வசதியாக அறிமுகம் செய்ய படுத்தப்பட உள்ளன.