சிங்கப்பூருக்கு பசுமை ஆற்றலை இறக்குமதி செய்யும் மலேசியா...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உரிமம் பெற்ற மின்சார இறக்குமதி நிறுவனமான Sembcorp மலேசியாவிற்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான Tenaga Nasional Berhad உடன் இணைந்து சிங்கப்பூருக்கு இயற்கை எரிசக்தி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இம்மாதம் துவங்கும் ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இயற்கை ஆற்றல் சான்றிதழுடன் இயற்கை ஆற்றலை இறக்குமதி செய்யும் முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
மேலும் சான்றிதலானது ஆற்றல் எங்கே உருவாக்கப்படுகிறது,நிலையான வளங்களில் இருந்து பெறப்படுகின்றதா என்பதை உறுதி செய்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மின்சார விற்பனை (CBES RE) திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு முதல் 50MW பசுமை மின்சாரத்தை மலேசியா வழங்குகிறது.
இதனால் மலேசியா ஆசியானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
Follow us on : click here