Latest Tamil News Online

இருக்கும் இடத்திலேயே சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு செல்லலாமா? அது எப்படி?

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு புது விதமான அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அம்சம் உலகின் எந்த விமான நிலையத்திலும் கிடையாது.

உலகில் பிஸியான விமான நிலையத்தில் இதுவும் ஒன்று. அதில் எல்லோராலும் விரும்ப கூடிய இணைய விளையாட்டு தளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தள விளையாட்டை விரும்புவார்கள்.

அதையே தற்போது சாங்கி விமான நிலையம் புதிய அம்சமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

சாங்கி விமான நிலையத்திற்கு சென்று வரும் அனுபவத்தைப் பெறுவதற்கு தற்போது இணையத்தின்வழி மெய்நிகர் முறையில் பெறலாம்.

இதற்கு காரணம் Roblox இணைய விளையாட்டு தளத்தில் இணைந்திருப்பதே.

மெய்நிகர் விளையாட்டுத் தளத்தில் இணைந்திருக்கும் முதல் விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் திகழும்.

உலகில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களால் சாங்கி விமான நிலையத்தின் அனுபவத்தைப் பெற இயலாது.இப்போது,மெய்நிகர் மூலம் இணையத்தின் வழி சாங்கி விமான நிலையத்தின் அனுபவத்தைப் பெறலாம்.

அந்த தளத்தை 200 மில்லியனுக்கும் அதிகமானோர் உலக முழுவதும் பயன்படுத்துகின்றனர்.

“ChangiVerse ´´ பல்வேறு நாடுகளில் இருப்பவர்களுக்கும் சாங்கி விமான நிலையத்துக்கு சென்று வரும் புது அனுபவத்தைக் கொடுக்கிறது.

இதில் ஜீவெல், கட்டுப்பாட்டுக் கோபுரம்,சாங்கி விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களைக் கண்டு களிக்கலாம்.

இந்த விளையாட்டில் பயணப் பெட்டிகளைக் கோர்வது,விமான இருக்கைச் சீட்டைப் பெறுவது போன்ற அம்சங்களையும் விளையாட்டாக விளையாடலாம்.