சிங்கப்பூரின் 2024 கேலிச்சித்திர மாநாட்டில் இடம்பெற்ற 400க்கும் மேற்பட்ட படைப்புகள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெற்ற கேலிச்சித்திர மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வானது மெரினா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 70 பேர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், பல கலைஞர்கள் வித்தியாசமான முறையில் புதுமையான இசையை உருவாக்கினர்.
பொதுமக்களை கவர பலர் கேலிச்சித்திர வேடமணிந்து உலா வந்தனர்.
இவர்களின் ஒப்பனை மற்றும் உடைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இளவரசிகள், ராணுவ வீரர்கள் போன்ற கதாபாத்திரங்களுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இத்துறையில் உள்ள மற்ற கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பாகவும் இது கருதப்படுகிறது.
அவர்கள் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள்,திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபலங்களை போல் உடையணிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைந்த உற்சாகமான துள்ளலான இசை பல்வேறு இளம் இதயங்களைக் கவர்ந்தது.
Follow us on : click here