வடக்குப்பகுதி தைவானில் ஆகாயவெளியை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த வேளையில் நிலைமையை நுணுக்கமாக கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வேண்டுமென்றால்,விமானச் சேவைகளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று CNA விடம் கூறியது.
வரும் 16-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை 18-ஆம் தேதி வரை தைவானுக்கு வடக்கே உள்ள ஆகாய வெளிப் பகுதியை மூடவிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பகுதியில் உள்ள விமானச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
கேட்டுக்கொண்டதற்கு பிறகு,ஆகாய வெளியை மூடும் காலக்கட்டத்தைச் சீனா குறைத்துக் கொண்டதாக தைவான் தெரிவித்துள்ளது. சீனா ஏப்ரல் 16-ஆம் தேதி காலையில் 27 நிமிடங்களுக்குக் குறைத்துக்கொண்டதாக தைவான் கூறியுள்ளது.
இது குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை.
தென்கொரியா ஆகாயவெளியை மூட முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. செயற்கைக்கோள் ஏவுகணையில் இருந்து பொருள் விழக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.