சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்களுக்காக நிலையம்!!
சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டத்தின் போது இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையத்தில் இல்லப் பணிப்பெண்கள் மற்ற மொழிகளில் பேசுவதற்கு அடுத்த ஆண்டு அதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முதியோர்களின் பராமரிப்புக்கு உதவுவதே அதன் நோக்கம்.மேலும் சிங்கப்பூருக்கு வந்த பணிப்பெண்களில் தனிமையில் தவிப்பவர்களுக்கு வெள்ளி நாடா திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு ஆலோசனை சேவைகள்,மனநல பயிற்சி குறித்த கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படும்.
இல்லப் பணிப்பெண்களின் தேவைகளை அறிவதற்காக ஓர் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.அது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தப்படும்.
இந்த ஆய்வின் மூலம் அவர்களுக்கு தேவையான சேவைகளையும் ,திட்டங்களையும் உருவாக்க முடியும் என்று அந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here