தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்...!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!!
தென் கொரியாவில் பரந்த அரசியல் அமைதியின்மை மற்றும் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டிய இராணுவச் சட்டத்தைத் திணிக்க யூனின் சர்ச்சைக்குரிய மற்றும் குறுகிய கால முயற்சியைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
யூனின் மக்கள் அதிகாரக் கட்சியின் (PPP) உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
இதனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதுடன், ஆளும் கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மீண்டும் உள்ளே சென்று வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு போராட்டங்கள் தொடரும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், சிங்கப்பூரர்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் சியோலில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இதற்கான ஆலோசனையை வழங்கியது.
சிங்கப்பூரர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தென் கொரியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் உள்ளூர் செய்திகளைக் கேட்டு அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here