ஏப்ரல் 3-ஆம் தேதி Sin Ming வட்டாரத்தில் உள்ள Thomson Grand கூட்டுரிமை வீட்டில் பாதுகாவலரைக் கார் ஓட்டுநர் ஒருவர் அவரைக் கண்டபடி திட்டியுள்ளார்.
இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தை Shin min daily செய்தி தளத்துக்கு குடியிருப்பாளர் ஒருவர் அனுப்பிய காணொளியின் மூலம் தெரிய வந்தது.
காரின் உரிமையாளர் தமது கார் சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டவுடன் பாதுகாவல் அதிகாரியை கடுமையாக திட்டி சத்தமிட்டுள்ளார்.
அதை உடனடியாக அகற்றும் படியும் கூறியிருக்கிறார்.
“எனக்கு இங்கு எத்தனை வீடுகள் இருக்கின்றன என்பது தெரியுமா? எங்களைச் சிரமப்படுத்துவதில்தான் உங்களுக்கு நாட்டம் உள்ளது. நீஙகள் எல்லோரும் ஏழைகள்.ஏன்? உயிருடன் இருக்கிறீர்கள்?´´ என்று அவர் கூறியதெல்லாம் பாதுகாவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
அதில், பாதுகாவல் அமர்ந்திருக்கும் இடத்தின் கண்ணாடியையும் அவர் குத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே உரிய இடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தது.இதனைப் பாதுகாவல் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் கூறியது.
குடியிருப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒட்டுவில்லை வாகனத்தில் இல்லை.
பலமுறை ஓட்டுநரைப் பாதுகாவல் அதிகாரி தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
ஆனால்,அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால்,காரின் சக்கரங்களை பூட்ட முடிவு செய்ததாக சங்கம் அதனுடைய முகநூல் பக்கத்தில் தகவலைப் பதிவிட்டிருந்தது..
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தது. இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.