மறுபயனீட்டு பொருட்களை பயன்படுத்தினால் தள்ளுபடியா?!

மறுபயனீட்டு பொருட்களை பயன்படுத்தினால் தள்ளுபடியா?!

சிங்கப்பூர்:சிக்லாப் குடியிருப்பாளர்கள் பசுமை புரட்சி மேற்கொள்ளும் பொழுது பணத்தை சேமிக்க உதவும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பிடோக் உணவு நிலையத்தின் பிரமாண்ட திறப்பு நிகழ்ச்சியின் போது இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலிக்கி ஓஸ்மான் அவர்களும் கலந்துகொண்டார்.

பசுமை முயற்சிகளுக்கு ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்றும் அதற்கு ஆதரவளிப்பதை கடமையாகக் கருத வேண்டும் என்று கூறினார்.

உணவு தயாரிக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினால், கிட்டத்தட்ட 70 கடைகளில் 10 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும்.

சிக்லாப்பில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு மறு பயனீடு செய்யக்கூடிய கரண்டிகள்,முள் கரண்டிகள், மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் குவளைகள் ஆகியவை வழங்கப்பட்டன.