சிங்கப்பூரில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஜஹபர் ஷாலியும், அவரது மனைவி ஃபாரா நாடியாவும்,தங்களுடைய இரண்டு குழந்தைகளுடனும் Our Tampines Hub உள்ள NTUC FairPrice பேரங்காடிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த Iftar bites பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அங்கு பணிபுரியும் ஓர் ஊழியர் அவர்களை “மரியாதை இன்றி விரட்டிவிட்டதாக´´ CNA விடம் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜஹபர் Iftar bites இல் இருந்த தகவல் பகலகையை வாசிக்க சென்றுள்ளார். அப்போது ஊழியர் “இந்தியா முடியாது´´ என அவரிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
அப்போது,ஜஹபருக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பமாக இருந்துள்ளது.
ஊழியர்,“இந்தியா முடியாது, மலாய் மட்டுமே´´ என சொன்னார்.
ஜஹபர் அந்த ஊழியரிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், மீண்டும் “ இந்தியா எடுக்க முடியாது´´ என்று கூறியிருக்கிறார்.
“இந்தியர்களும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்´´ என ஜஹபர் விளக்கம் கொடுத்ததாக கூறினார்.
ஆனால், அந்த ஊழியர் ஜஹபர் கூறியதைப் பொருட்படுத்தவில்லை.“ எனக்கு படிப்பறிவு இல்லை, மேலிடத்தில் இருப்பவர்களின் கட்டளையைப் பின்பற்றுகிறேன்´´ என்று ஊழியர் கூறியதாக ஜஹபர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்திற்கு NTUC FairPrice குழுமம் மன்னிப்பு கேட்டது.