Singapore Job News Online

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் கைது!

ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று காலை 7:15 மணிக்கு சிங்கப்பூர் சிலேத்தார் விரைவு சாலையை நோக்கி செல்லும் மத்திய விரைவு சாலையில் மூன்று கார்களும் ஒரு லாரியும் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை மற்றும் SCDF க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

அத்துடன் காயங்களுடன் மீட்கப்பட்ட 33 வயதான லாரி ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மதுபோதையில் காரை ஓட்டிய 27 மற்றும் 47 வயதுள்ள இரண்டு ஆண்கள் மற்றும் 29 வயது பெண்ணாகிய மூவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது வாகன விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.இதற்கு மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.