பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது.
உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதற்கு அருகில் ஒரு குழியை கண்டுள்ளனர்.
அந்தக் குழியை இதுவரை பார்த்ததில்லை என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே பள்ளம் புதிதாக உருவாகியிருக்கலாம் என மீட்புக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் துளைக்குள் கேமராவைச் செலுத்திய போது எதுவும் கிடைக்கவில்லை.
இரண்டாவது கேமரா குழிக்குள் இறக்கப்பட்ட போது ஒரு ஷூ என்று நம்பப்படும் ஒரு பொருள் கேமராவில் காணப்பட்டது.
இந்நிலையில் அவர் குழிக்குள் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திருவாட்டி பொலார்டை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Follow us on : click here