யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இடம் பெற்ற கெபாயா ஆடை…!!!

யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இடம் பெற்ற கெபாயா ஆடை...!!!

சிங்கப்பூர்: உலகெங்கிலும் ஆடை விரும்பிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.ஆள் பாதி.. ஆடை பாதி …என்பதற்கு ஏற்ப ஆடையிலேயே பெருமளவு தொகை செலுத்தி தன்னை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக நேர்த்தியாக உடை அணிபவர்களும் உண்டு.

அந்த வகையில் கெபாயா எனும் ஆடை ரகம் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் புதன்கிழமை (டிசம்பர் 4) பராகுவேயின் தலைநகரான அசன்சியனில் நடைபெற்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர், புருனே, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து யுனெஸ்கோவின் பட்டியலில் கெபாயா ஆடையை சேர்க்க முன்மொழிந்தன.

5 நாடுகளும் இணைந்து செய்த முதல் விண்ணப்பம் தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முதல் பயன்பாடு இதுவாகும்.

கெபாயா 5 நாடுகளின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கிறது.

கெபாயா ஆடையானது பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அந்த ஆடையானது தென்கிழக்கு ஆசிய சமூகங்களில் பரவலாக அணியப்படுவதாகும்.

இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தன்மையினால் இது யுனெஸ்கோவின் கலாச்சார பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது.