Singapore news

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19 கிருமி பரவலா?

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சகம் கோவிட்-19 தொற்று பற்றிய அண்மைய வாராந்திர கணக்கைக் காட்டியது. அதில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கில் குறிப்பிட்டிருந்தது .

இது இயல்பான ஒன்றுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

சுமார் 14,000 ஆக நோய் தொற்று எண்ணிக்கை மூன்று வாரத்தில் இருந்தது.

ஆனால்,அந்த எண்ணிக்கை மார்ச் கடைசி வாரத்தில் இரண்டு மடங்காக உயர்ந்தது. அது கிட்டத்தட்ட 28,000 -யைத் தாண்டியது.

நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக மருந்தகங்களும் அதிகமான நோயாளிகளைச் சந்திக்கின்றனர்.

மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வெளியில் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் கிருமி பரவல் எண்ணிக்கை உயர்வது இயல்புதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொற்று சம்பவங்களை சமாளிப்பதற்காக, கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் வகையில் கூடுதலாக மருந்துகளை மருந்தகங்கள் வாங்கி வைக்கின்றனர்.

நோய் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் மிதமான அறிகுறிகளே தென்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து அதன் பிறகு,நிலைமைச் சீரடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.