சிங்கப்பூரில் நேற்று கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை ஒட்டி இந்நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் தொண்டு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத மிரட்டல்களை கண்காணிப்பதற்காகவும், கூட்டத்தை சமாளிப்பதற்காகவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
பாதுகாப்பு தொண்டடூழியர்களின் எண்ணிக்கை சில தேவாலயங்களில் இரண்டு மடங்காக உள்ளது.
அவர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும்,AERO எனும் நெருக்கடி நேரப் பயிற்சி அமைப்பும் பயிற்சி அளித்துள்ளது.
அவர்களுக்கு அவசர நிலையை எப்படி சமாளிப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
குடியிருப்பு வட்டாரங்களில் அமைந்துள்ள சிறிய தேவாலயங்களிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
SG Secure உறுப்பினர்கள் சிங்கப்பூரில் உள்ள அதிகமான தேவாலயங்களில் உள்ளனர்.
இதனால் அவை உடனுக்குடன் குறிப்பாக மிரட்டல் குறித்த தகவலைப் பெறுகின்றது.