இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..???

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..???

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு இம்மாதம் (டிசம்பர்) 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது.

அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த போசி டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு (2025) ஜனவரியில் இருந்து, சிந்து மீண்டும் போட்டிகளுக்காக தயாராவார் என்பதற்காக இந்த மாதமே அவர்களது திருமணம் நடைபெற முடிவெடுக்கப்பட்டது.

பிவி சிந்துவின் திருமண தொடர்பான நிகழ்ச்சிகள் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஹைதராபாத்தில் 24ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் பேட்மிண்டன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்துவிற்கு அடுத்த சீசன் முக்கியத்துவம் என்பதால் அந்தப் போட்டிற்கு விரைவில் பயிற்சியை தொடங்குவார் என்று அவரது தந்தை தெரிவித்தார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.