லிட்டில் Seeds பாலர் பள்ளியில் குழந்தைகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு!!

லிட்டில் Seeds பாலர் பள்ளியில் குழந்தைகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கல்வாரி பாப்டிஸ்ட் தேவாலயத்தில் உள்ள லிட்டில் சீட்ஸ் பாலர் பள்ளியில் படிக்கும் 24 குழந்தைகள் திடீர் வயிற்றுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் நான்கு பேர் தற்பொழுது வீடு திரும்பி உள்ளனர்.

மீதமுள்ள மூவரின் உடல்நிலை சீராக உள்ளது.

சுகாதார அமைச்சகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு மற்றும் குழந்தை பருவ மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு நிறுவனம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறியது.

குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக பாலர் பள்ளியுடன் இணைந்து செயல்படுவதாக கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலர் பள்ளிகள் உணவு சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றும்படி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.