சிங்கப்பூரில் இந்திய மரபுடமை நிலையம் 2 சுற்றுலாக்களை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஏற்பாடு “தமிழ்மொழி விழா 2023´´-இன் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இது நேற்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) நடைபெற்றது.
அதில் நிலையத்தின் காட்சி கூடங்களின் சிறப்புகளைப் பற்றி தமிழில் எடுத்துச் சொல்லப்பட்டது.
இந்த வழிகாட்டி சுற்றுலாவை இளைஞர்கள் இரு வழி உரையாடல் மூலம் வழிநடத்தினர்.
வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி( சனிக்கிழமை) மீண்டும் வழிகாட்டி சுற்றுலா நடைபெறும்.