சிங்கப்பூர் : பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து!!

சிங்கப்பூர் : பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து!!

பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கருப்புக் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த தகவலை 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தது.

இந்த விபத்து குறித்து மதியம் சுமார் 2.10 மணியளவில் தகவல் தெரிய வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இச்சம்பவத்தின் வீடியோ SGRoad Blocks/Traffic News Telegram தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.