Latest Singapore News in Tamil

சிங்கப்பூருக்கு முதன்முறையாக கிடைத்த அங்கீகாரம்!

சிங்கப்பூர் ஐக்கிய நாட்டு நிறுவன போதைப்பொருள் ஒழிப்பு ஆணையம் எனும் CND யின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

CND என்பது ஐக்கிய நாட்டின் நிறுவனத்தின் ஓர் முக்கியமான அமைப்பு. போதைப்பொருள் கொள்கைகளைக் குறித்து முடிவெடுக்கும் அமைப்பு.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அனைத்துலக தடுப்பு நடவடிக்கைகள், உலகளாவிய போதைப் பொருள் நிலவரம் உள்ளிட்டவைகளைக் குறித்து ஆராய்ந்து திட்டங்களை வகுக்கும்.

CND -யின் பார்வையாளர் தகுதியை 1997-இல் சிங்கப்பூர் பெற்றது.

உறுப்பினர் அங்கீகாரம் முதன்முறையாக கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தியோ கூறினார்.

உறுப்பினர் பொறுப்பில் சிங்கப்பூர் அடுத்த ஆண்டிலிருந்து 2027 வரை நீடிக்கும்.

உலக நிறுவனப் போதைப்பொருள் ஒழிப்பு ஆணையத்தின் 66-ஆம் அமர்வு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றது. இந்த 66-ஆம் அமர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை நடந்தது.

அதில் கலந்துக் கொண்ட தியோ,“ போதைப்பொருள் ஒழிப்பில் சிங்கப்பூரின் பன்முக அணுகுமுறைச் சிறந்த பயனளித்து வருவதாக´´ குறிப்பிட்டார்.