என்ன சிங்கப்பூர் வேலைக்கு வர இது கட்டாயமா??

என்ன சிங்கப்பூர் வேலைக்கு வர இது கட்டாயமா??

நம்மில் பலருக்கு கோட்டா என்றால் என்ன? கோட்டா அப்ளை செய்ய எவ்வளவு செலவாகும்? என்பது பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் இருப்பர். இது அவர்களுக்கான பதிவு!! தெரியாததை தெரிந்து கொள்வோம்!! SGTAMILAN மூலமாக பயன் பெறுவோம்!!

சிங்கப்பூரில் பல விதிமுறைகளின்படி கம்பெனிகள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கின்றனர்.

கோட்டா என்பது என்ன? :

சிங்கப்பூரர்களை விட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக கிடைப்பதினால் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக கிடைத்தது. சிங்கப்பூரர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் கோட்டா எனும் விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

ஓர் உதாரணமாக :

சிங்கப்பூரில் உள்ள கம்பெனிகள் ஐந்து சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுத்தால் மட்டுமே ஒரு வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு எடுக்க முடியும். ஆனால் கோட்டா வருவதற்கு முன்பு ஓரிரு சிங்கப்பூரர்களை மட்டும் வேலைக்கு எடுத்துவிட்டு, அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தனர். அவ்வாறு கம்பெனிகள் செய்வதை குறைப்பதற்காக கோட்டா எனும் விதிமுறை கொண்டு வரப்பட்டது.

கோட்டா எனும் விதிமுறை வந்த பிறகு சிங்கப்பூரர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது.

கோட்டா என்பது பணம் கொடுத்து வாங்குவது கிடையாது.வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் கம்பெனிகளின் தகுதியை MOM ஆராயும்.

கம்பெனியில் வேலை செய்யும் சிங்கபூரர்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உள்ளதோ அதைப் பொறுத்து வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதற்கு MOM அனுமதி கொடுப்பார்கள்.

உங்களை வேலைக்கு எடுப்பவர்கள் கோட்டா இல்லை என்று கூறி அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறினால், கோட்டாவுக்கு பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுங்கள். ஏஜென்ட்கள் உங்களிடம் கோட்டா இல்லை என்று கூறினால் நீங்கள் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கேளுங்கள். கோட்டா வந்த பிறகு பணம் செலுத்துகிறேன் என்று கூறிவிடுங்கள்.

இது போன்ற தகவலைத் தெரிந்து கொள்ள Sgtamilan இணையபக்கத்தில் இணைந்திருங்கள்.