சிங்கப்பூர் : ஆற்றில் மிதந்து வந்த சடலத்தால் ஏற்பட்ட பரபரப்பு!!

சிங்கப்பூர் : ஆற்றில் மிதந்து வந்த சடலத்தால் ஏற்பட்ட பரபரப்பு!!

சிங்கப்பூரில் உள்ள Eu Tong Sen ஸ்ட்ரீட்டில் உள்ள ஆற்றில் 57 வயதுடைய நபரின் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து டிசம்பர் 1-ஆம் தேதி (நேற்று) காலை சுமார் 7.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

அவரது உடலைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை மற்றும் மருத்துவ உதவியாளர்களும் கரைக்கு கொண்டு வந்தனர்.

அவர் இறந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக ‘செய்தி’யிடம் காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் , இந்த மரணத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதும் நடந்ததாக தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.