பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

தமிழகம் மற்றும் இலங்கையில் பல இடங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது.இதனால் தமிழகம் மற்றும் இலங்கையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதியில் கரையைக் கடந்தது.

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதன் சேவைகள் மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.

சென்னை மட்டும்அல்லாமல் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.விளைநிலங்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.