இன்னும் சிங்கப்பூரில் பூச்சிகளை உணவுப் பொருட்களாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால்,சில உணவகங்கள் அனுமதியின்றி பட்டுப்புழுக்களை விற்பனை செய்வதாக CNA கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியிட்டது.
இவ்வாறு அனுமதியின்றி பூச்சிகளை விற்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்காது என சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
எச்சரிக்கையோ அல்லது விற்பனையை நிறுத்த கோரி கூறும் ஆணையோ உணவகங்கள்மீது பிறப்பிக்க படலாம் என்றும் கூறியது.
ஏப்ரல் 5-ஆம் தேதி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரடியாக சென்றபோது பட்டுப்புழுக்கள் விற்கப்படவில்லை என CNA கூறியது.
சில கடைகளின் ஊழியர்களுக்கு அவற்றை விற்பதற்கு அனுமதி கிடையாது என்பது தெரியாது என்றும் கூறினார்.
கடைகளுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர்.
இனி, பட்டுப்புழுக்களை விற்கப் போவதில்லை எனவும் சில கடைகள் தெரிவித்தது.
சென்ற ஆண்டு பொதுமக்களிடம் சிங்கப்பூரில் பூச்சிகளை உணவாக விற்பனைச் செய்வது குறித்த கருத்துக்கணிப்பை அமைப்பு நடத்தியது.
மொத்தம் 16 வகைப் பூச்சிகள் குறித்து நடத்தப்பட்டது. அதில் பட்டுப்புழுவும் ஒன்று.