டெலிமெடிசின் சேவையில் குறைபாடுகளை ஆராயும் அமைச்சகம்..!!!

டெலிமெடிசின் சேவையில் குறைபாடுகளை ஆராயும் அமைச்சகம்..!!!

சிங்கப்பூர்: இணையத்தில் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில் டெலிமெடிசின் தளங்களில் குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுகாதார அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், எடை இழப்புக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் ஏழு தளங்களில் இரண்டு குறைபாடுகள் உள்ளதாகக் கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

இரண்டு பிரபலமான டெலிமெடிசின் தளங்கள் அறிவுரை வழங்கியபோது கேமரா இயக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சகம், “டாக்டர்-நோயாளி உறவை ஏற்படுத்த கேமராவை ஆன் செய்து நேரடியாக ஆலோசனை வழங்குவதும், இணையத்தில் அதே தரமான அறிவுரைகளை வழங்குவதும் அவசியம்” என்று கூறியது.

அவ்வாறான மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்தது.

விதிமீறல்கள் மற்றும் சலுகைகளுக்கான அம்சங்கள் உள்ளதா போன்ற விவரங்களை ஆராய்வதாகக் கூறியது.

சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், டெலிமெடிசின் சேவைகள் இரண்டு வழிகளில் நடத்தப்பட வேண்டும்.

அவை இருவழி தொடர்பு மற்றும் நேரலையில் பார்ப்பது மற்றும் கேட்பது போன்றவை ஆகும்.

அதில் குறைபாடுகள் இருந்தபோதிலும், டெலிமெடிசின் ஒரு தடையற்ற மற்றும் மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்கக்கூடியது என்று அமைச்சகம் கூறுகிறது.