புழுக்களை வளர்க்க ஆர்வம் காட்டும் ஜிம்பாப்வே மக்கள்..!!!

புழுக்களை வளர்க்க ஆர்வம் காட்டும் ஜிம்பாப்வே மக்கள்..!!!

ஸிம்பாப்வே விவசாயிகள் வறட்சியை சமாளிக்க புழுக்களின் உதவியை நாடுகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த புழுக்களை வளர்ப்பது விவசாயிகளுக்கு பெரும் தயக்கமாக இருந்தது.

ஆனால், அதற்கு அளவில்லா பலன் கிடைத்ததும் ஸிம்பாப்வே விவசாயிகள் களத்தில் இறங்கினர்.

ஒவ்வொரு நாளும் புழுக்களுக்கு உணவாக கழிவுகள் கொடுக்கப்படுகின்றன.

பின்னர் இவை மாதம் ஒருமுறை கோழிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவாக கொடுக்கப்படுகின்றன.

இதன் மூலம் கோழிப்பண்ணைகள் பெரும் லாபம் கண்டுள்ளன.

வழக்கமாக கடைகளில் வாங்கப்படும் 50 கிலோகிராம் கோழித் தீவனத்தின் விலை 35 டாலர்கள்.

புழு வளர்ப்பு காரணமாக அந்த விலை 40 சதவீதம் சரிந்தது.

புழுக்கள் சுற்றுச்சூழலுக்கும் நன்மை அளிக்கிறது.

ஸிம்பாப்வே ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் கழிவுகளை எப்படியும் உற்பத்தி செய்கிறது.

புழுக்களுக்கு உணவளிப்பது கரிம உமிழ்வைக் குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.