சிங்கப்பூரில் அரிய கலப்பின சூரிய கிரகணம்!

வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி அரிய கலப்பின சூரிய கிரகணத்தைச் சிங்கப்பூரில் காணலாம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும்.

சூரிய கிரகணம் காலை 10.54 மணிக்கு தொடங்கி, 11.55 மணியளவில் உச்சக்கட்டத்தில் இருக்கும். பிற்பகல் 12.58 மணிக்கு முடிவடையும்.

நிலா இருக்கும் திசையினாலும், பூமியின் வட்ட வடிவினாலும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய சில இடங்களில் முழுமையான கிரகணத்தைப் பார்க்க இயலாது.

சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும்.

அதிகபட்சமாக சுமார் 15 விழுக்காட்டை மட்டுமே சூரியனை மட்டுமே நிலா மறைக்கும். இது சிங்கப்பூரில் காணக்கூடிய சூரிய கிரகணமாகும் என சிங்கப்பூரின் அறிவியல் நிலையம் கூறியது.

முழுமையாக சூரியக் கிரகணம் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில இடங்களில் கண்ணுக்குத் தெரியும்.