Singapore Job News Online

இனி,சிங்கப்பூரில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படுமா?

சிங்கப்பூரில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்னர்,குழந்தைக்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் தேவை அதிகமாக இல்லாததால் Our Tampines Hub,one punggol hub,Queens town சமூக நிலையம்,தாமான் ஜூரோங் சமூக நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.

ஒருங்கிணைந்த தடுப்பூசி நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சகம் செயல்படுத்தவிருக்கிறது.

ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் JTVC எனும் கூட்டுப் பரிசோதனை தடுப்பூசி நிலையங்களிலும்,CVC எனும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலையங்களிலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடங்கப்படும்.

இனி பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள 9 JTVC நிலையங்களை அணுகி போட்டுக்கொள்ளலாம்

மொத்தம் 9 JTVC நிலையங்கள், அதில் 6 JTVC நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

சுகாதார அமைச்சகம், தகுதி பெறுவோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று கூறியது.