சிங்கப்பூர் பொதுத்துறை ஊழியர்களை குறிவைத்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களால் பரபரப்பு..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணம் கேட்டு மிரட்டி சில மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
அம்மாதிரியான போலி மின்னஞ்சல்கள் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டதாக தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடிகளால் 30 அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐந்து பேர் அமைச்சர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் மற்றும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சர் எட்வின் தோங் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மின்னஞ்சல்களில் ஆபாசமான வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வீடியோக்கள் வெளிவராமல் இருக்க 50,000 டாலர் (67,096 வெள்ளி) கேட்கப்பட்டது.
போலியான காணொளிகளைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிப்பதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
Follow us on : click here