நாடகக் கலைஞர்களாக மாறும் சிறை கைதிகள்...!!!
பெருவில் உள்ள லுரிகான்சோ சிறைச்சாலை மிகவும் பிரபலமானது.
அங்குள்ள கைதிகள் வித்தியாசமான முறையில் மேடை நாடகத்தை நடத்துவர்.
கொள்ளை மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கைக் கதையை சித்தரித்து நடிப்பார்கள்.
நாடகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்கள்.
ஆனால் சிறையில் அவர்களின் நல்ல நடத்தையால் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த மேடை படைப்பிற்கு பெயர் ‘Lurigancho, the musical’என்பதாகும்.
இந்த நாடகமானது “Gran Teatro Nacional” இல் நிகழ்த்தப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 30 கைதிகள் மேடை கலைஞர்களாக மாறியுள்ளனர்.
2023 முதல், அவர்கள் 3 மேடை நாடகங்களை நிகழ்த்தியுள்ளனர்.
நாடகத்தின் போது அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க சுமார் 100 அதிகாரிகள் அரங்கில் காவலில் உள்ளனர்.
இந்த நாடகத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.
சிறை உயர் அதிகாரிகளும், கைதிகளின் குடும்பத்தினரும் அதைக் கண்டு ரசிப்பார்கள்.
சிறை கைதிகள் நடத்தும் நாடகத்தின் வழி அவர்கள் மற்றவர்களுக்கு
முன் உதாரணமாக இருக்க முடியும் என கூறப்படுகிறது.
Follow us on : click here