பூட்டப்படாத கார்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து எச்சரிக்கும் காவல்துறை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் Suntec City கார் பார்க்கிங்கில் திறக்கப்பட்ட கார்களில் இருந்து பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை 56 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திருடியுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் சிங்கப்பூரர் ஒருவர் தனது காரை சன்டெக் சிட்டி கார் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டுச் சென்றார்.
அவர் கவன குறைவாக தனது காரின் கதவுகளை பூட்டவில்லை.
பூட்டப்படாத கார்களில் திருடும் நோக்கத்துடன் அங்கு வந்த முஹம்மது ரஷித் முஹம்மது அலி, கதவுகள் பூட்டப்படாததை அறிந்ததும் காரின் கதவுகளைத் திறந்து பொருட்களை திருடினார்.
காரில் இருந்த 1,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 30,000 வெள்ளி மதிப்புள்ள கடிகாரத்தை திருடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் மூன்று நாட்களுக்கு பின், போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று, அதே பகுதியில் திறக்கப்படாத காரில் இருந்து 14,000 வெள்ளி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை ரஷித் திருடினார்.
அதே நாளில் இரவு 9.50 மணியளவில் பூட்டப்படாத மற்றொரு காரில் இருந்து 25,328 வெள்ளி ரொக்கத்தை திருடியுள்ளார்.
திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி நகைக் கடையில் 10,350 வெள்ளி மதிப்புடைய பிரேஸ்லெட்டை வாங்கியுள்ளார்.
புகாரின் பேரில் செப்டம்பர் 19ம் தேதி ரஷித்தை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவருக்கு நேற்று (நவம்பர் 27) 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காவல்துறையினர் பொதுமக்களை கவனமுடன் இருக்கவும், தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினர்.
Follow us on : click here