சிங்கப்பூரில் குறைந்து வரும் சூதாட்ட நடவடிக்கைகள்…!!!

சிங்கப்பூரில் குறைந்து வரும் சூதாட்ட நடவடிக்கைகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீப காலமாக சூதாட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சூதாட்டம் ஆடுபவர்களின் எண்ணிக்கை 2017 இல் 52 சதவீதமாகவும்,2020 இல் 44 சதவீதமாகவும்,2023 இல் 40 சதவிகிதமாகவும் குறைந்து காணப்படுகிறது.

இந்த எண்ணிக்கையானது 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சூதாட்ட பிரச்சனைக்கான தேசிய மன்றம் இந்த ஆய்வை நடத்தியது.

இதில் மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

40 சதவீதம் பேர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

சூதாட்டம் ஒரு பிரச்சனையாக உருவாவதற்கான நிகழ்தகவு சுமார் ஒரு சதவீதமாக கூறப்படுகிறது.

ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 25 வெள்ளியை சூதாட்டத்தில் செலவிடுகிறார் என்று ஆய்வு கூறுகிறது.

அது மூன்று ஆண்டுகளுக்கு முன், 15 வெள்ளியாக இருந்தது.

சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது.

ஆனால் அதன் தொகையானது அதிகரித்து காணப்படுகிறது.

மூன்று சிங்கப்பூரர்களில் ஒருவர் 4Dக்குச் செல்கின்றனர்.

அடுத்தது TOTO 29 சதவீத மக்கள் இதற்குச் செல்கின்றனர்.

இணைய சூதாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால் சட்டவிரோதமான ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இணைய சட்டவிரோத சூதாட்டமானது 0.7 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதத்தை எட்டியுள்ளது.

சூதாட்ட பிரச்சனைக்கான தேசிய மன்றம் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.