ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த தீ சம்பவங்களால் பரபரப்பு…!!!

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த தீ சம்பவங்களால் பரபரப்பு...!!!

சிங்கப்பூர்: யீஷூன் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் ஒரே வாரத்தில் 8 தீ விபத்துகள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

வடக்கு கயா கூட்டுரிமை வீட்டின் கட்டுமான தளத்தில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் யாரோ தீ வைத்தது தெரியவந்தது.

அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்த தீ விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றன.

கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள், தளபாடங்கள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கட்டுமானப் பணியாளர்களும் பின்னர் தீயை அணைத்தனர்.

தீ விபத்து சம்பவங்களை ஏற்படுத்திய சந்தேக நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையானது நடைபெற்று வருகிறது.