இணையத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான பொருட்கள்…!!

இணையத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான பொருட்கள்...!!

சிங்கப்பூர்: சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஆன்லைனில் விற்கப்படும் 3,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுகாதார தயாரிப்புகளை அகற்றியுள்ளது.

அவற்றை விற்பனை செய்த 1,000க்கும் மேற்பட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக, 8 முன்னணி ஆன்லைன் சந்தைகளுடன் இணைந்து ஆணையம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இதில் Amazon Singapore, Carousell, Ebay Singapore, Facebook, Lazada, Qoo10, Shopee, Tiktok போன்ற 8 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீக்கப்பட்ட பொருட்களில் 48 சதவீதம் அழகு சாதன பொருட்களுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய பொருட்களில் 40 சதவிகிதம் மருந்தகங்களில் மட்டும் விற்கப்படும் மருந்துகள் என்று கூறப்படுகிறது.

எனவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொழுது நம்பிக்கையான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே சுகாதாரப் பொருட்களை வாங்குமாறு ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான சுகாதாரப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆணையம் நினைவூட்டியது.

சட்டவிரோதமாக சுகாதார பொருட்களை விற்பனை செய்தால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.