லாவோஸ் மதுபான சம்பவ விவகாரத்தில் ஹோட்டல் ஊழியர் உட்பட 7 பேர் கைது…!!!

லாவோஸ் மதுபான சம்பவ விவகாரத்தில் ஹோட்டல் ஊழியர் உட்பட 7 பேர் கைது...!!!

லாவோஸில் மெத்தனால் கலந்த மதுபானம் விற்கப்படுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு விடுதி மேலாளர் மற்றும் ஏழு பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நவம்பர் மாதம் 12ஆம் தேதி வாங் வியோங் நகரில் நச்சு கலந்த மதுபானத்தை குடித்து 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அப்பகுதியில் மெத்தனால் கலந்த மதுபானம் விற்கப்படுவது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் டென்மார்க், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

லாவோஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள்.

சுற்றுலாப் பயணிகளின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதாக லாவோஸ் காவல்துறை உறுதியளித்துள்ளது.

மெத்தனால் போதையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மெத்தனால் ஒரு நச்சு பொருள் என்பதால் இது கண் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் சில சமயங்களில் மரணம் கூட நிகழலாம்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.