செல்ல பிராணியை தாக்கிய பணிப்பெண்ணிற்குச் சிறை தண்டனை…!!!

செல்ல பிராணியை தாக்கிய பணிப்பெண்ணிற்குச் சிறை தண்டனை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாயை சித்திரவதை செய்து அடுக்குமாடி கட்டிடத்தின் வேலியில் கட்டிவைத்த பணிப்பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரை சேர்ந்த 26 வயதான ஜுன்னி லால் ஆன் புயீ என்பவர் 3 விலங்குகளை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பாய்பாய் என்ற நாய் பலமுறை சித்திரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாக தேசிய பூங்கா சேவைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பணிப்பெண் ஜுன்னி நாயை துன்புறுத்திய வீடியோவானது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அந்த பணிப்பெண் பூடில் வகை நாயை கயிற்றில் தொங்கவிட்டார்.

நாய் துடிதுடித்த போதும் மேலும் அவர் தன் கைகளால் தாக்கியுள்ளார்.

விலங்கை சித்திரவதை செய்ததால் அந்த பணிப்பெண்ணிற்கு தற்போது சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.